Connect with us

Raj News Tamil

அரிவாளை எடுத்து காட்டிய ஆட்டோ ஓட்டுநர்..தட்டி தூக்கிய போலீஸ்

இந்தியா

அரிவாளை எடுத்து காட்டிய ஆட்டோ ஓட்டுநர்..தட்டி தூக்கிய போலீஸ்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து மஞ்சேரி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து கொண்டோட்டி பகுதியில் சென்ற போது முன்னாடி சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று பேருந்துக்கு வழிவிடாமல் சென்றுள்ளது.

பேருந்து ஓட்டுநர் பலமுறை ஹாரன் அடித்துள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுநர் அரிவாளை எடுத்து வெளியே நீட்டியுள்ளார். ஆட்டோ ஓட்டுநர் அரிவாளை காட்டும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக பேருந்து ஓட்டுநர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆட்டோ ஓட்டுநர் சம்சுதீன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரிவாளை கூர்படுத்துவதற்காக கொண்டு சென்றதாகவும் பேருந்து ஓட்டுநர் தொடர்ந்து பலமுறை ஹாரன் அடித்ததால் கோவத்தில் அரிவாளை காட்டியதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top