இந்தியாவின் முதல் அரசு ஓடிடி தளம் – துவக்கி வைத்த கேரள முதல்வர்

கடந்த சில வருடங்களாகவே ஓடிடி தளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே செல்கிறது. படம் வெளியான சில வாரங்களில் இந்த ஓடிடி தளங்களில் படங்கள் வெளியாகி வருவதால் தியேட்டரில் பார்க்க முடியாத ரசிகர்கள் அனைவருக்கும் இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க பிரபலமான படங்களை மட்டுமே இந்த ஓடிடி தளங்கள் வாங்குவதாகவும், சிறிய பட்ஜெட் படங்களை கண்டு கொள்வதில்லைஎன்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் மலையாள தயாரிப்பாளர்களுக்கு கை கொடுக்கும் விதமாக இந்தியாவிலேயே முதன் முறையாக அரசாங்கம் மூலம் நடத்தப்படும் ‘சி ஸ்பேஸ்’ என்கிற ஓடிடி தளத்தை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் துவக்கி வைத்துள்ளார். கேரள மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இந்த ‘சி ஸ்பேஸ்’ ஓடிடி தளம் செயல்பட இருக்கிறது.

RELATED ARTICLES

Recent News