கொலை செய்வதற்கு முன்பு உடலுறவு.. அதிர வைத்த கேரள பெண்.. அதிர்ச்சி தந்த குற்றப்பத்திரிக்கை..

கேரள மாநிலம் பாறசாலை மூறியன்கரை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ். 23 வயதான இவரும், கிரீஷ்மா என்ற 22 வயதான பெண்ணும், காதலித்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், தனது காதலியை சந்திப்பதற்கு, அவரது வீட்டிற்கு ஷாரோன் ராஜ் சென்றுள்ளார்.

அப்போது, அந்த பெண் கொடுத்த கசாயத்தை குடித்த அவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், காதலி கிரீஷ்மாவை கைது விசாரணை நடத்தினர்.

அதில், ராணுவ வீரர் ஒருவரை திருமணம் செய்துக் கொள்வதற்கு, தனது காதலன் இடையூறாக இருப்பதால், அவரை விஷம் வைத்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, கிரீஷ்மாவிற்கு உடந்தையாக இருந்த அவரது தாயையும், மாமாவையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பல்வேறு அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது, பல்வேறு சந்தர்ப்பங்களில், அவர்கள் பாலியல் ரீதியாக சந்தித்துள்ளனராம். மேலும், கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள் இரவு, சுமார் 1 மணி நேரம் செல்போனில் இருவரும் பேசியுள்ளனர். அப்போது, அவர்களின் உரையாடல்கள் பெரும்பாலும், பாலியல் ரீதியாகவே இருந்துள்ளது. மறுநாள் காலை, கிரீஷ்மா ஷரோனை உடலுறவுக்கு அழைக்க பலமுறை தொடர்பு கொண்டாராம். இந்த தகவல், அனைத்தும், குற்றப்பத்திரிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News