2-வது காதலனுக்காக முதல் காதலனை நிர்வாணம் ஆக்கிய காதலி! பகீர் சம்பவம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி பிரியா. 19 வயதாகும் இவர், கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும், இளைஞர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இதற்கிடையே, லட்சுமி பிரியாவுக்கும், அவருடன் கல்லூரியில் படிக்கும் இன்னொரு மாணவருக்கும் இடையே, பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, முதல் காதலனை பிரேக்-அப் செய்த லட்சுமி பிரியா, கல்லூரியில் பழகி வந்த மாணவனை காதலித்து வந்தார்.

இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த முதல் காதலன், “என்னை நீ காதலிக்க வேண்டும்” என்று கூறி, லட்சுமி பிரியாவிடம் வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு பலமுறை அவர் மறுப்பு தெரிவித்தும், முதல் காதலன் தொடர்ந்து, தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன லட்சுமி பிரியா, அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

அதாவது, 2-வது காதலன் மற்றும் அவரது 5 கூட்டாளிகளோடு இணைந்து, முதல் காதலனை கடத்தி சென்றுள்ளார். அதன்பிறகு, அவரை நிர்வாணம் ஆக்கி, வீடியோ எடுத்து, உடல் முழுவதும் சிகரெட் நெருப்பால் சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளார்.

பின்னர், அவரிடம் இருந்த செல்போனையும், ரொக்கப் பணத்தையும் எடுத்துக் கொண்டு, முதல் காதலனை விட்டுவிட்டு சென்றுள்ளார். இதுகுறித்து முதல் காதலனின் பெற்றோர், காவல்துறையில் புகார் அளித்த நிலையில், அவர்கள் லட்சுமி பிரியாவை கைது செய்தனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடைய 2-வது காதலனையும், கூட்டாளிகளையும், காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News