கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஷாஜி. இவர் தனது மனைவி ஆஷ்லின், மகன் சாஜன், உறவினர்கள் எட்வின், அன்வி ஆகியோருடன், காரில் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த பெண்கள், அந்த காரை வழிமறித்து, தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், காரில் இருந்த அனைவரும் பெரும் காயம் அடைந்தனர்.
இதுதொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த விசாரணையில், சில பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து, பல்வே இணையதளங்களில் ஷாஜி வெளியிட்டதாகவும், அதன்காரணமாக தான் இந்த தாக்குதல் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஏற்கனவே காவல்நிலையத்தில் புகார் அளித்துவிட்டபோதிலும், அந்த பெண்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து, கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டதாக 59 பெண்கள் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், கேரளா சாலுக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற காவலில் அவர்களை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த பெண்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், பிரிவு 307ன் கீழ் கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.