கேரளா மாநிலத்தில் 2023 – 24 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை அம்மாநில நிதியமைச்சர் கே.என் பாலகோபால் நேற்று தாக்கல் செய்தார். அப்போது மாநில வருவாயை உயர்த்த பெட்ரோல், டீசல் எரிவாயுக்களுக்கு கூடுதல் வரி விதிப்பதாக அவர் தெரிவித்தார். இதனால் கேரளாவில் பெட்ரோல், டீசலின் விலை ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வு அதிகரிப்பதால் மாநில அரசு செலவீனம் அதிகரித்துள்ளதாக கூறிய நிதியமைச்சர் இதன் மூலம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் கிடைக்கும் நிதியை சமூக நல பாதுகாப்பு திட்டங்களுக்கு பயன்படுத்தவுள்ளதாகக் கூறியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் காய்கறி, மளிகை பொருள்கள் விலையும் உயரும். இதன் காரணமாக விலைவாசி உயர்வு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கேரள அரசின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.