கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றது.
இந்நிலையில், தேவிக்குளம் பகுதியில் ராஜா என்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் போலியாக சாதி சான்றிதழ் வழங்கி ரிசர்வ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக காங்கிரஸ் தலைமையிலான UDF கூட்டணி வேட்பாளர் டி குமார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் எம்எல்ஏ ராஜாவின் வெற்றி செல்லாது என தீர்ப்பளித்துள்ளது. மேலும் இவருடைய சாதி சான்றிதழ் செல்லாது எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.