கேரளாவில் ஓடும் ரயிலில் மர்ம நபர் ஒருவர் திடீரென சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பயங்கர சம்பவத்தில் ஒரு வயது குழந்தை, ஒரு பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 9 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
இதையடுத்து என்ஐஏ – கேரள போலீஸார் அடங்கிய தனிப்படை, மகாராஷ்ட்ரா போலீஸார் உதவியுடன் அங்குள்ள ரத்னகிரியில் பதுங்கியிருந்த ஷாருக் சைஃபி (32) என்பவரை கைது செய்தது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள ஷாருக் சைஃபி நேற்று ஒரு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், “ரயிலில் தாக்குதல் நடத்தினால் நல்ல காலம் வரும் என ஒருவர் என்னிடம் கூறி வந்தார். அதனால்தான் ரயில் பயணிகள் மீது தீ வைத்தேன்.
பிறகு அதே ரயிலில் வேறு பெட்டிக்கு சென்று படுத்துக் கொண்டேன். கண்ணூர் வந்ததும் அங்கு இறங்கி மகாராஷ்ட்ரா சென்றேன். ரத்னகிரி என்ற இடத்தில் ஓடும் ரயிலில் இருந்து கீழே இறங்கிய போது காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது போலீசிடம் மாட்டிக்கொண்டேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.