கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கோடநூர் பகுதியை சேர்ந்தவர் ஜாய். 60 வயதான இவருக்கு, ரிஜோ என்ற மகன் உள்ளார். இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் மது அருந்திவிட்டு, வீட்டிற்கு வந்துள்ளார். தூங்க செல்வதற்கு முன், மறுநாள் காலை 8 மணிக்கு, தன்னை எழுப்பிவிடும்படி, தந்தையிடம் அவர் கூறியுள்ளார்.
ஆனால், இதனை மறந்துவிட்ட அவரது தந்தை, தனது மகனை 8.15 மணிக்கு எழுப்பியுள்ளார். வெறும் 15 நிமிடங்கள் தாமதமாக தந்தை எழுப்பியதால், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், தனது தந்தையை இரும்பு கம்யின் மூலம், அடித்தே அவர் கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ரிஜோவை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.