கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் கடந்த 5 ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் கரையை கடந்தது. இந்நிலையில் அரபிக்கடலில் உருவான வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக கேரளா மற்றும் கேரளாவை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வந்தது.
அடுத்த 2-3 நாட்களுக்கு கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோழிக்கோடு மற்றும் வயநாடு மாவட்டங்களில் சனிக்கிழமை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று பத்தனம்திட்டா மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களிலும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.