பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில், கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் கே.ஜி.எப். பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படம், 500 கோடி ரூபாய் வரை வசூலித்து, சாதனை படைத்தது.
இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த ஸ்ரீநிதி ஷெட்டி, தற்போது பல்வேறு மொழிப் படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார். தமிழிலும், விக்ரம் நடிப்பில் வெளியான கோப்ரா படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், கே.ஜி.எப் படப்பிடிப்பின்போது, நடிகை ஸ்ரீநிதி ஹெட்டியிடம், யாஷ் தவறாக நடந்துக் கொண்டதாக, தகவல் ஒன்று பரவி வந்தது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தகவல் குறித்து, நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார்.
அதில், யாஷ் ஒரு சிறந்த மனிதர். அவர் எனக்கு எந்தவொரு தொந்தரவும் கொடுக்கவில்லை. சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர் என்று கூறியுள்ளார்.