தமிழக அரசின் தரப்பில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பின்படி, வனத்துறை அமைச்சராக உள்ள பொன்முடிக்கு, தற்போது கூடுதலாக இன்னொரு துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
அதாவது, பால் வளத்துறை அமைச்சராக உள்ள ராஜ கன்னப்பன், காதித்துறையையும் நிர்வகித்து வந்தார். தற்போது, அவரிடம் இருந்த காதித்துறை, அமைச்சர் பொன்முடிக்கு வழங்கி, தமிழக அரசு சார்பில், அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிராம தொழில் வாரியத்துறையும், அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்டுள்ளது.