சர்வதேச அளவில் சாதனை புரிந்த இந்திய விளையாட்டு வீரர்களுக்கு, ஆண்டுதோறும் கேல் ரத்னா விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதை பெறுபவர்களுக்கு, 25 லட்சம் ரூபாய் பணமும், சான்றிதழ்களையும், மத்திய அரசு வழங்கி வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுகள் பெறும் விளையாட்டு வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 3 பேர், இந்த முறை விருதை வாங்க உள்ளனர்.
அதாவது, உலக அளவில் செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஸ், ஹாக்கி போட்டியில் சாதனை படைத்த ஹர்மன்பிரீத், துப்பாக்கி சுடுதல் போட்டியில் சாதனை படைத்த மனு பாக்கர் ஆகியோருக்கு, கேல் ரத்னா விருது வழங்க இருப்பதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.