கடந்த 19 -ம் தேதி தொடங்கிய 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்ற இந்த போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தன.
இந்த போட்டியில் 55 தங்கம், 48 வெள்ளி, 53 வெண்கலம் என 156 பதக்கங்களுடன் மராட்டிய அணி முதலிடம் பிடித்தது. 38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என 97 பதக்கங்களுடன் தமிழ்நாடு அணி இரண்டாம் இடம் பிடித்தது. 35 தங்கம், 22 வெள்ளி, 46 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் அரியானா அணி மூன்றாம் இடம் பிடித்துள்ளது .
கடந்த 13 நாட்களாக நடைபெற்ற இந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் நிறைவு விழா இன்று மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.
இதில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்குகிறார்கள்.