கிளாமர் நடிகைக்கு டும்…டும்! சோகத்தில் ரசிகர்கள்!

பாலிவுட் முன்னணி நடிகையான கியாரா அத்வானியும், நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் காதலித்து வருவதாகவும், இருவரும் டேட்டிங் செய்வதாகவும் பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் கிசுகிசுக்கப்பட்டது.

கடந்த புதன்கிழமை நடிகை கியாரா அத்வானிக்கும் நடிகர் சித்தார்த்தின் மும்பை வீட்டிலிருந்து சென்று திரும்பியதை புகைப்படக் கலைஞர் ஒருவர் பார்த்துள்ளார்.

பின்னர் அவருக்கு பல விதங்களில் போட்டோ எடுப்பதற்கு போஸ் கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் கிளுகிளுப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இணையத்தில் வெளிவரும் வதந்திகள் உண்மையா என செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு டேட்டிங்கில் இருப்பதாகவும்,மேலும் இது தொடர்பான கேள்விகளுக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

இவர்கள் சமீபத்தில் breakup செய்த நிலையில் ,தற்போது இருவரின் நெருக்கம் மற்றும் இணைந்து வெளியிடும் வீடியோ விரைவில் திருமணம் செய்வதற்கு அடித்தளமாக அமைகிறது.

இதற்கிடையில் சித்தார்த் மல்ஹோத்ரா இந்தியாவின் போலிஸ் ஃபோர்ஸ்,மிசென் மஜ்னு போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகை கியாரா அத்வானி தெலுங்கில் ராம் சரணின் RC15 படத்தில் நடித்து வருகிறார்.