குழந்தைகள் தவறு செய்தால், அவர்களை தண்டிக்கும் உரிமை பெற்றோர்களுக்கு உண்டு. ஆனால், அவ்வாறு கொடுக்கும் தண்டனை, அந்த குழந்தைகளை திருத்த வேண்டுமே தவிர, கடுமையான உளைச்சலுக்கு ஆளாக்க கூடாது.
அப்படியான சம்பவம் ஒன்று தற்போது நடந்து, இணையத்தில் பெரும் எதிர்ப்பு அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டத்தில் உள்ள ரூர்கீ பகுதியை சேர்ந்த பெண், தனது மகனை தரையில் தள்ளி கடுமையாக அடித்துள்ளார்.
மேலும், அவனது கண்ணத்தில் சரமாரியாக தாக்கி, கடித்து வைத்திருக்கிறார். அடியை தாங்க முடியாத அந்த சிறுவன், தண்ணீர் வேண்டும் என்று கதறி கேட்டபோதும், அதற்கு செவி கொடுக்காத பெண், தொடர்ச்சியாக கொடூரமாக அவனை தாக்கியுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வந்தது. இந்த வீடியோ வைரலானதையடுத்து, அந்த பெண் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.