கிடாவிற்கு கிடைத்த பெருமை!

கடந்த 80 ஆண்டுகளாக கோவா திரைப்பட விழா நடந்து வருகிறது. புகழ்பெற்ற படங்களை கொண்டாடும் இவ்விழாவின், பனோராமா பிரிவில் சூர்யாவின் ஜெய்பீம் படம் இடம்பெற்றிருந்தது.

தற்போது, மீண்டும் இன்னொரு தமிழ் படம் இந்த விருது விழாவில் இடம்பெற்றுள்ளது. அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள கிடா என்ற திரைப்படம், ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படம் எனக் கூறப்படுகிறது.

திரைக்கு வரும் முன்னதாகவே கோவா திரைப்பட விழாவில் தேர்வாகிய இப்படம், தமிழர்களின் வாழ்வியலை அச்சு அசலாக திரையில் வடிக்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.