தந்தையுடன் கோவிலுக்கு சென்ற இளம் பெண்ணை விடியற்காலை நேரத்தில் காரில் நான்கு பேர் கடத்திய சம்பவத்தில் கடத்தி சென்ற வாலிபரிடம் தாலி கட்டிக் கொண்ட இளம்பெண் மாலையில் பேட்டி கொடுத்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா ஸ்ரீ சில்லா மாவட்டம் முட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரய்யா.
தன்னுடைய மகள் ஷாலினியுடன் (18) சந்திரயா இன்று காலை அதே ஊரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றார்.
சாமி கும்பிட்ட பின் இரண்டு பேரும் கோவிலில் இருந்து வெளியே வந்தனர். அப்போது அங்கு காருடன் காத்திருந்த நான்கு பேர் சாலினியை காரில் ஏற்றி கடத்தி சென்றனர்.

மகளை கடத்தி செல்பவர்களை தடுத்து நிறுத்த முயன்ற சந்திரய்யா மீது அவர்கள் தாக்குதல் நடத்தி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் பற்றி சந்தரய்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
சந்திரய்யா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பதிவாகி இருக்கும் இளம்பெண் கடத்தல் தொடர்பான காட்சிகளை கைப்பற்றி அடிப்படையில் ஷாலினியை கடத்தி சென்ற நான்கு பேரையும் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன் வீடியோ ஒன்றை வெளியிட்ட ஷாலினி, நானும் ஜான் என்பவரும் கடந்த நான்காண்டுகளாக காதலித்து வருகிறோம்.
எங்கள் காதலை குடும்பத்தினர் ஏற்கவில்லை. எனவே திட்டம் போட்டு கடத்தல் நாடகம் நடத்தி காதலருடன் சென்று திருமணம் செய்து கொண்டேன் என்று அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.
