மத்திய பிரதேச மாநிலம், போபால் விஜயநகரில் ஆதரவற்றோர் இல்லம் உள்ளது. அரசு சாரா தொண்டு நிறுவனம் நடத்தி வரும் இந்த இல்லத்தில் பராமரிக்கப்படும் பெண் குழந்தைகளை நிர்வாகம் சரியாக கவனிக்கவில்லை என்றும், குழந்தைகள் துன்புறுத்தப்படுவதாகவும் புகார் எழுந்தது. மேலும் தவறு செய்தால் தண்டனை என்ற பெயரில் கடுமையாக சித்ரவதை செய்ததாகவும் புகார் எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக குழந்தைகள் நலக் குழு அளித்த புகாரின் அடிப்படையில், ஆதரவற்றோர் இல்லத்துடன் தொடர்புடைய 5 பெண்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அங்கு தங்கியிருந்த 4 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை அதிகாரிகள் மீட்டு அரசு நடத்தும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லம் மற்றும் மற்றொரு காப்பகத்தில் சேர்த்தனர். அத்துடன் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சீல் வைத்தனர்.