“அட நல்ல முடிவு எடுத்துட்டாரே” – வடகொரிய அதிபரின் அடுத்த அதிரடி முடிவு.. குவியும் பாராட்டு!

கொடூரமான நடைமுறைகளுக்கும், தண்டனைகளுக்கும் பேர்போன நாடு என்றால், அது வடகொரியா தான். பல நாடுகள், இந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதித்தும், அதுதொடர்பாக எந்தவொரு கவலையும் கொள்ளாமல், ஏவுகணை சோதணையை தொடர்ந்து செய்து வருகிறது.

இதுமட்டுமின்றி, தனது தந்தையின் நினைவு தினத்தையொட்டி, மக்கள் சிரிக்கவும், அழுகவும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை காண்பதற்கும், அந்நாட்டு அதிபர் கிம்-ஜாங் உன் தடை விதித்திருந்தார்.

இவ்வாறு பல்வேறு விநோதமான செயல்பாடுகளை கொண்ட இந்நாட்டு அதிபர், தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிற்கு 3 குழந்தைகள் உள்ளனர். முதலாவதாக பிறந்தது ஒரு ஆண் குழந்தை மற்றும் 2-வதாக பிறந்தது பெண் குழந்தை என்றும் கூறப்படுகிறது.

இதில், 2-வதாக பிறந்த தனது மகளை, விரைவில் வடகொரிய அதிபராக மாற்றுவதற்கு முயற்சிகள் நடந்து வருகிறதாம். பொதுவாக அதிபர் பதவிகளில் ஆண்கள் மட்டுமே இருந்து வந்த நிலையில், தனது மகளை அந்த பதவியில் அலங்கரிக்க அவர் ஆலோசித்துள்ளதாக யூகங்கள் கிளம்பியுள்ளது.

RELATED ARTICLES

Recent News