Connect with us

Raj News Tamil

இங்கிலாந்து மன்னர் சார்லஸ்க்கு புற்றுநோய் பாதிப்பு..!

உலகம்

இங்கிலாந்து மன்னர் சார்லஸ்க்கு புற்றுநோய் பாதிப்பு..!

இங்கிலாந்து மன்னராக கடந்த 2023-ம் ஆண்டு மூன்றாம் சார்லஸ் பதவியேற்றுக் கொண்டார். உடல்நல பிரச்சினை காரணமாக கடந்த மாதம் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டார் .

பரிசோதனையில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை அதிகாரபூர்வமாக தகவல் தெரிவித்தது.

மன்னருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் குணமடைந்து அரண்மனைக்கு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து மன்னர் சார்லஸ் விரைவில் குணமடைந்து ஆரோக்கியம் பெற இந்திய மக்களுடன் இணைந்து தாமும் பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார்.

More in உலகம்

To Top