Connect with us

Raj News Tamil

லியோ-வில் பிரபல நடிகையை ஒளித்து வைத்திருக்கும் லோகேஷ்?

சினிமா

லியோ-வில் பிரபல நடிகையை ஒளித்து வைத்திருக்கும் லோகேஷ்?

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இந்த படத்தில், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத் என்று பல்வேறு பிரபலங்கள், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தில் இன்னொரு பிரபல நடிகையை, லோகேஷ் கனகராஜ் நடிக்க வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பிரபல நடிகை கிரன் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், உங்களை பற்றி ரூமர் ஒன்று சொல்லுங்கள் என்று தொகுப்பாளர் கூறினார்.

அதற்கு, நான் லியோ படத்தில் நடித்துள்ளேன் என்று கூறியுள்ளார். இது உண்மையான தகவலா? அல்லது ரூமரா? என்று ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

More in சினிமா

To Top