ஆஸ்கர் விருது பெற வேண்டும் என்பது, சினிமாத்துறையில் பணியாற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் உள்ள உச்சபட்ச ஆசை என்று கூறலாம்.
ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சினிமாத்துறை சார்ந்த அமைப்பு, அந்த நாட்டில் எடுக்கப்பட்ட சிறப்பான படத்தை தேர்வு செய்து, அந்த விருதை வழங்கும் குழுவுக்கு அனுப்பி வைப்பார்கள்.
அந்த வகையில், FFI என்ற இந்திய திரைப்பட கூட்டமைப்பு தான், ஆஸ்கர் விருது விழாவுக்கு இந்தியா சார்பில் அனுப்பப்படும் படங்களை தேர்வு செய்கின்றனர். இந்த அமைப்பு, தற்போது லாபாட்டா லேடிஸ் என்ற இந்தி திரைப்படத்தை, 2025-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இதுதொடர்பாக, அந்த கூட்டமைப்பு, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “கீழ்படிதல் மற்றும் ஆதிக்கம் செலுத்துதல் என்ற வித்தியாசமான கலவை தான் இந்திய பெண்கள்.
இந்த பண்முகத்தன்மை வாய்ந்த கலவையை லாபாட்டா லேடிஸ் என்ற திரைப்படம் சரியான வகையில் படம்பிடித்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.