சீரியல் நடிகையை கரம்பிடிக்கும் பசங்க பட நடிகர்..!

கடந்த 2009-ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க படத்தில் அறிமுகமானவர் கிஷோர். அன்புக்கரன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த இவர், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை பெற்றார்.

இதையடுத்து தெலுங்கு உள்ளிட்ட பல்வாறு மொழிகளில் நடித்துள்ளார். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சீரியல் நடிகை ப்ரீத்தியுடன் இருக்கும் புகைப்படத்தை ஹேர் செய்துள்ள கிஷோர், பிறந்த நாள் வாழ்த்துக்கள் அசோம்மா உன்னை திருமணம் செய்ய ஆவலுடன் கத்துக்கொண்டு இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அடுத்த ஆண்டு இருவரும் கணவன் மனைவியாக பிறந்த நாள் கொண்டாடுவோம் என்று பதிவிட்டு தனது காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிரபல தனியார் டிவியில் ஒளிபரப்பாகும் கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, வானத்தை போல ஆகிய சீரியல்களில் நடிக்கும் ப்ரீத்தி, கிஷோரை விட 4-வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.