இந்தியாவின் ஜாதிவாரி புள்ளியியல் தகவல்களை அறிவது முக்கியமானது என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
இது குறித்து ராகுல் காந்தி திங்கள்கிழமை வெளியிட்ட ‘எக்ஸ்’ சமூகவலைதளப் பதிவில், ‘பிகார் மாநில மக்கள்தொகையில் 84 சதவீத மக்கள் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு (ஓபிசி), பட்டியலின (எஸ்சி) மற்றும் பழங்குடியினா் (எஸ்டி) பிரிவைச் சோ்ந்தவா்கள் என்பது நிரூபணமாகி உள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் அந்தப் பிரிவினருக்கான அதிகாரப் பங்கீடு அமைய வேண்டும்.
மத்திய அரசின் 90 செயலா்களில் 3 போ் மட்டுமே ஓபிசி பிரிவைச் சோ்ந்தவா்கள். மத்திய பட்ஜெட்டிலிருந்து இந்தப் பிரிவு மக்களுக்கு 5 சதவீத நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எனவே, இந்தியாவின் ஜாதிவாரி புள்ளியியல் தகவல்களை அறிவது முக்கியமானது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.