13 வருடத்திற்கு ஒரு முறை மட்டும் பூக்கும் அபூர்வ வகையான நீல குறிஞ்சி பூக்கள் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பூத்துக் குலுங்குகின்றன…
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் வருடத்திற்கு ஏற்றவாறு குறிஞ்சி பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இந்த குறிஞ்சி பூ குடும்பத்தில் ஏறக்குறைய 200 வகைச் செடிகள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் ஆசிய நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றன.
இவற்றில் 150 வகைகள் இந்தியநாட்டில் மட்டும் தென்படுகின்றன. இதில் முப்பதுக்கும் மேற்பட்ட குறிஞ்சி வகை பூக்கள் மேற்கு தொடர்ச்சிமலைகளான நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலைகளில் மட்டுமே பூத்து குலுங்குகின்றன.
இந்த குறிஞ்சி மலர்ச்செடிகள் மலை சார்ந்த இடங்களில் மட்டுமே வளர்கின்றன.
மேலும் கடல் மட்டத்திலிருந்து 1300 முதல் 2400 மீ. உயரத்தில் இந்த குறிஞ்சி மலர் வகைகள் பூக்கும். மேலும் பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை நீலக்குறிஞ்சி பூக்கள் பூக்கின்றன.
7 வருடங்களுக்கு ஒரு முறை சிறு குறிஞ்சி பூக்களும்,வருடத்திற்கு ஒரு முறை ஓடை குறிஞ்சி மலர்கள் பூப்பது குறிஞ்சி பூ வகைகளின் தனிசிறப்பாகும். தற்போது கொடைக்கானலில் பூத்துள்ள 13 வருடத்திற்கு ஒரு முறை மட்டும் பூக்கும் அபூர்வ வகையான நீல குறிஞ்சி பூ வகைகள் ஸ்ட்ரோபிலாந்தஸ் லன்டா என்ற வகையை சேர்ந்ததாகும்,தற்போது இந்த அபூர்வ வகையை சேர்ந்த நீல குறிஞ்சி பூக்கள் ஏரிச்சாலை அருகே உள்ள தனியார் விடுதியிலும் மலைச்சாலைகளில் ஆங்காங்கே பூத்து குலுங்கிறது.