மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அரசு மருத்துவமனையில், பெண் மருத்துவர் ஒருவர், இரவு நேர பணியில் ஈடுபட்டார். மறுநாள் காலையில், அந்த பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சஞ்சய் ராய் என்பவரை கைது செய்தனர்.
இந்த சம்பவம், நாடு முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மருத்துவர்கள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்த நிலையில், நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதில், சஞ்சய் ராய் தான் குற்றவாளி என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று, சஞ்சய் ராய்-க்கான தண்னையை நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன்படி, சஞ்சய் ராய்-க்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சாகும் வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், 40 ஆயிரம் ரூபாய் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு 17 லட்சம் ரூபாய் இழப்பீடு நிதி வழங்கவும், அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில், மேல்முறையீடு செய்ய மாட்டோம் என்று, சஞ்சய் ராயின் தாய் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.