Connect with us

Raj News Tamil

சூரியின் அடுத்த படம்.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட கொட்டுக்காளி டீம்..

சினிமா

சூரியின் அடுத்த படம்.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட கொட்டுக்காளி டீம்..

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தனது பயணத்தை தொடங்கியவர் சூரி. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை படத்தின் மூலம், கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். தற்போது, பல்வேறு திரைப்படங்களில் நாயகனாக நடிப்பதற்கு, வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இதற்கிடையே, கூழாங்கல் என்ற படத்தை இயக்கிய இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில், கொட்டுக்காளி என்ற படம் உருவாகி வருகிறது. இந்த படத்திலும், நடிகர் சூரி தான் ஹீரோவாக நடித்து வருகிறார். மலையாள நடிகை அன்னாபென் தான் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று, தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்துள்ளதாக, படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, படம் ரிலீசுக்கு தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக அளவில் கவனம் பெற்ற கூழாங்கல் என்ற படத்தை இயக்கிய இயக்குநர் தான், தற்போது சூரியை வைத்து கொட்டுக்காளி என்ற படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top