கொட்டுக்காளி திரைப்படம் எப்போது ரிலீஸ்?

கூழாங்கல் என்ற திரைப்படத்தை இயக்கி, தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பி.எஸ்.வினோத் ராஜ்.

முதல் படத்திலேயே, தனது தனித்துவமான கதை சொல்லல் மூலமாக, பல்வேறு சர்வதேச விருதுகளை வென்ற இவர், தற்போது கொட்டுக்காளி என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள இப்படத்தில், நடிகர் சூரி ஹீரோவாக நடித்துள்ளார். இந்த திரைப்படமும், பல்வேறு விருதுகளை, சர்வதேச அளவில் பெற்று வந்ததால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

இந்நிலையில், கொட்டுக்காளி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பான தகவலை, படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்டு 23-ஆம் தேதி அன்று, ரிலீஸ் ஆக உள்ளது.

RELATED ARTICLES

Recent News