கோவையில் இடைவிடாது பெய்த கனமழையால், பிரதான சாலையில் மழை நீர் தேங்கியது. இதையடுத்து அங்குள்ள கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்து மழைநீர் வடிந்தோட உதவிய போலீஸ்காரருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கோவயில் பெய்த கனமழையால் கழிவுநீர் கால்வாய்கள் அகற்றப்படாத குப்பைகளின் காரணமாக அடைத்துக்கொண்டது.
இதனால் தண்ணீர் வெளியேற முடியாமல் சாலைகள் குளம்போல் காட்சியளித்தன. மேலும் அந்த வழியாக இருசக்கர வாகனங்கள், கார்களில் சென்ற வாகன ஓட்டிகளும் சிரமமடைந்தனர்.
வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மழையும் தொடர்ந்து பெய்து வந்ததால் அந்த சாலையில் மேலும் தண்ணீர் பெருகியது.
இந்த நிலையில், மழைநீர் வெள்ளம்போல் தேங்கியிருப்பதை பார்த்த போலீஸ்காரர் ஒருவர் ஏன் தண்ணீர் தேங்குகிறது என்பதை கவனித்து உடனடியாக அந்த போலீஸ்கார சாலையோரம் இருந்த கழிவுநீர் கால்வாயின் மேற்புறம் இருந்த குப்பைகளை அகற்றினார்.
குறிப்பிட்ட நேரத்தில் கச்சிதமாக செயல்பட்ட போலீஸ்காரரின் இந்த செயலை அங்கிருந்த யாரோ வீடியோவாக படம்பிடித்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.இது தற்போது வைரலாகி வருகிறது. இதை பார்த்த அனைவரும் அந்த காவலரை பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.