நடிகர் தனுஷ் தற்போது இட்லிக் கடை என்ற படத்தை, இயக்கி, நடித்து வருகிறார். இந்த திரைப்படம், ஏப்ரல் 10-ஆம் தேதி அன்று, ரிலீஸ் ஆக உள்ளது.
முன்னதாக, இவர் இயக்கியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற திரைப்படம், பிப்ரவரி 14-ஆம் தேதி அன்று, ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்க, சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, வரும் ஜூன் 20-ஆம் தேதி அன்று, ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். இந்த தகவல் உறுதியானால், இந்த வருடத்தில் மட்டும், தனுஷின் 3 திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.