ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் நடிப்பில் உருவான திரைப்படம் குடும்பஸ்தன். குடும்ப வாழ்க்கையில் இணையும் இளைஞன் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து, இந்த திரைப்படம் உருவாகி இருந்த நிலையில், மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் வசூல் நிலவரம் என்ன என்று, தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் 9 நாட்களில், 13.5 கோடி ரூபாயை இப்படம் வசூலித்துள்ளதாம்.
இன்னும் ஒரு வாரத்திற்கு புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாது என்பதால், படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று, சினிமா வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.