காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமானவர் குமரி அனந்தன். தீவிர இலக்கியவாதியான இவர், வயது மூப்பு காரணமாக, இயற்கை மருத்துவமனை ஒன்றில், சிகிச்சை பெற்று வந்தார்.
இவரது உடல்நலம் மோசமானதையடுத்து, பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அங்கு மருத்துவர்கள் வழங்கிய சிகிச்சை பலனின்றி, நேற்று இரவு காலமானார்.
இவரது மறைவை அறிந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நேரிலும், சமூக வலைதளங்களிலும், தங்களது இரங்கல்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அனைத்து சடங்குகளும் முடிக்கப்பட்டு, தற்போது அரசு மரியாதையுடன், அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.