காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பெரியார் நகரில் ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகர் கோவில் மற்றும் அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது. மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலில் சுவாமி சிலைகளுக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி யாக சாலை பூஜைகள் கடந்த புதன்கிழமை தொடங்கியது, இதில் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், மஹாலக்ஷ்மி ஹோமம் ஆகியவை நடைபெற்றது.
பின்னர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அங்கு திரண்டிருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.