திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலையில் , தாண்டிக்குடி கிராமத்தில் பழமை வாய்ந்த ,பாலமுருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ,8யாக கால பூஜைகள் நடைபெற்று ,அரோகரா கோஷத்துடன் புனித நீர் கலசங்களுக்கு ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில் குமார், தாண்டிக்குடியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் மற்றும் கொடைக்கானலை சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.கலந்துகொண்ட,அனைவருக்கும் பிரசாதமும்,அன்னதானமும் வழங்கப்பட்டது.