Connect with us

Latest Tamil News, Tamil Nadu News Today, இன்றைய செய்திகள்

குவைத் தீ விபத்திற்கு இதுதான் காரணம்…வெளியான அதிர்ச்சி தகவல்

kuwait fire accident

உலகம்

குவைத் தீ விபத்திற்கு இதுதான் காரணம்…வெளியான அதிர்ச்சி தகவல்

குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்தவர்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் வெளிவந்துள்ளன.

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்துக்கு சிலிண்டர் வெடித்ததே காரணம் என அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

தரைதளத்தில் படிக்கட்டை ஒட்டிய பராமரிப்பு அறையில் விதிகளை மீறி 6க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகவும் சிலிண்டர்கள் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிகபட்சமாக 100 பேரை மட்டுமே தங்க வைக்க இட வசதி உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 190 பேர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top