நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட எல்.முருகன், திமுக வேட்பாளர் ஆ.ராசாவிடம் 240585 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை மற்றும் அமைச்சரவையில் இடம்பெறக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, அவரது இல்லத்தில் தேனீர் விருந்து அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினரும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான எல்.முருகன் அழைக்கப்பட்டு உள்ளதன் மூலம் தமிழ்நாட்டுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்க உள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மோடி தலைமையிலான அமைச்சரவையில் பாஜகவின் மூத்த தலைவர்கள் ஆன அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பியூஷ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ், நிர்மலா சீதாராமன், மன்சுக் மாண்டவியா ஆகியோருக்கு முக்கிய இலாக்காகள் ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.