தார்மீக அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாட்னாவில் நடைபெற்ற எதிர்கட்சி தலைவர்களின் மாநாடு ஒரு நகைச்சுவையான விஷயம் என்று விமர்சித்தார்.
மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜக மீண்டும் அபார வெற்றி பெறும் என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய எல்.முருகன், ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, தார்மீக அடிப்படையில் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தார்.
அமலாக்கத்துறையின் அதிரடி சோதனைக்கு பிறகு, அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.