போதிய விலை இல்லாததால் வெண்டைக்காயை சாலையில் கொட்டிய விவசாயி

திருநெல்வேலி மாவட்டம் மானூர் தாலுகாவிற்கு உட்பட்ட வெள்ளப்பநேரி கிராமத்தில் வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த காய்கறிகள் நெல்லை பகுதியில் உள்ள மொத்த காய்கறி சந்தைகளில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மொத்த காய்கறி சந்தைகளில் வெண்டைக்காய்க்கு உரிய விலை இல்லாததால் கொண்டு வந்த காய்கறிகளை விவசாயி ஒருவர் சாலையில் மூட்டை மூட்டையாக கொட்டி செல்லும் காட்சிகள் சமூகலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காய்கறிகளுக்கு அரசு நிரந்தர விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயி கோரிக்கை வைத்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News