லிஃப்ட், டாடா ஆகிய இரண்டு வெற்றி படங்களை நடிகர் கவின் கொடுத்துள்ளார். தற்போது, நடன இயக்குநர் சதிஷ் இயக்கும் புதிய படத்தில், ஹீரோவாக நடித்து வருகிறார்.
இதற்கிடையே, தனது நீண்ட நாள் தோழியான மோனிகா என்பவரை, கவின் நேற்று திருமணம் செய்திருந்தார். இவருக்கு, ரசிகர்களும், பிரபலங்களும், தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை லாஸ்லியா, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என்னால் நிச்சயம் நம்ப முடியவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும், சோகமாக இருக்கும் தனது புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். கவின் திருமணத்தால் தான், அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.
