லக்சயா சென் 8-வது இடத்திற்கு முன்னேற்றம்!

சர்வதேச பேட்மிண்டன் போட்டிகளில் தொடர் வெற்றிகளை குவித்து வரும் இந்திய வீரர் லக்சயா சென், தரவரிசைப்பட்டியலில் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

அண்மை காலமாக, ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர், காமன்வெல்த் தொடர் என பல்வேறு போட்டிகளில் லக்சயா சென் தொடர் வெற்றிகளை குவித்ஹ்டு வருகிறார்.

இந்த நிலையில், சர்வதேச பேட்மிண்டன் தரவரிசை வெளியிடப்பட்டது. ஆடவர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் லக்சயா சென் 9-வது இடத்தில் இருந்து 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில், காயம் காரணமாக உலக சாம்பியன் பட்டத் தொடர் மற்றும் ஜப்பான் ஓபன் தொடரில் இருந்து விலகிய, இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, மாற்றமின்றி 6-வது இடத்தில் நீடிக்கிறார்