2015 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் யூனிவெர்ஸ் போட்டியில் பங்கேற்ற ஊர்வசி ரௌட்டல, தற்போது பாலிவுட்டில் பிரபல நடிகையாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான லெஜெண்ட் திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் புல்லட்டு பாடல் ஹீரோ ராம் பொத்தெண்ணி படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஒரு பாடலுக்கு மட்டும் அவர் வாங்கும் சம்பளம் 3 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. அதாவது 1நிமிடத்திற்கு 1கோடி ரூபாய் வீதம் 3 நிமிட பாடலுக்கு 3 கோடி ரூபாய் வாங்கியுள்ளாராம். இதன் மூலம் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகியாக ஊர்வசி ரௌட்டல உருவாகியுள்ளார்.