லெஜண்ட் சரவணன் நடித்த ‘லெஜெண்ட்’ என்ற திரைப்படம் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை என்றாலும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் இவரது அடுத்த படத்தை குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதாவது, சூரியை வைத்து கருடன் என்ற படத்தை இயக்கி வரும் துரை செந்தில்குமார் தான், லெஜெண்ட் சரவணின் புதிய படத்தை இயக்கவுள்ளாராம்.
பல கதைகளைக் கேட்ட லெஜண்டிற்கு, இயக்குனர் துரை செந்தில்குமாரின் கதை தான் பிடித்திருந்ததாம்.
இந்த தகவலால் இவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.