சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்துக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. சமந்தா, தனுஷ் என்று நீண்டுக் கொண்டே செல்லும் இந்த வரிசையில், தற்போது ஜி.வி.பிரகாஷ்-ம் இணைந்திருக்கிறார்.
இந்த வரிசை, வருங்காலங்களில் இன்னும் நீண்டுக் கொண்டே செல்லும் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு இருக்க, விவாகரத்து செய்த பிரபல நடிகர் ஒருவரை, நடிகை லேகா வாஷிங்கடன் காதலித்து வருவதாக, தகவல் கசிந்துள்ளது.
அதாவது, பாலிவுட் நடிகர் அமீர் கானின் உறவினரான இம்ரான் கானுக்கு, கடந்த 2019-ஆம் ஆண்டு விவாகரத்தானது.
அதன்பிறகு, திருமண உறவில் ஈடுபடாத அவர், தற்போது நடிகை லேகா வாஷிங்டனை காதலித்து வருவதாக, பேட்டி ஒன்றில் மறைமுகமாக கூறியுள்ளார். இதனையடுத்து, அவர்கள் இரண்டு பேருக்கும், ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.