Connect with us

Raj News Tamil

லியோ இசை வெளியீடு.. ரசிகர்களுக்கு கட்டுப்பாடு விதித்த புஸ்ஸி ஆனந்த்!

சினிமா

லியோ இசை வெளியீடு.. ரசிகர்களுக்கு கட்டுப்பாடு விதித்த புஸ்ஸி ஆனந்த்!

லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி அன்று, நடைபெற உள்ளது. இதுதொடர்பான பின்னணி பணிகள், விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கம் தலைமையின் தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு, தங்களது சொந்த வாகனங்களில் மட்டுமே வரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் விளைவிக்கக் கூடாது என்றும், உரிய அனுமதி பெற்று, பேனர் வைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in சினிமா

To Top