விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து வெளியாக இருக்கும் படம் லியோ. மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கும் இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில், லியோ திரைப்படம் எந்தெந்த இடங்களில் எவ்வளவுக்கு விற்பனை ஆகியுள்ளது, எத்தனை கோடிக்கு விற்கப்பட்டுள்ளது என்ற விவரங்கள் ஊடகங்களில் கசிந்துள்ளன.
அதன்படி, தமிழ்நாடு உரிமை ரூ.90 கோடி, வெளிநாட்டு உரிமை ரூ.55 கோடி, கேரளா உரிமை ரூ.15 கோடி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா உரிமை ரூ.20 கோடி, கர்நாடகா ரூ.12 கோடி, ஹிந்தி சாட்டிலைட் உரிமை ரூ. 22 கோடி, ஹிந்தி திரையரங்க உரிமை ரூ.10 கோடி, ஆடியோ உரிமை ரூ. 15 கோடி, சாட்டிலைட் உரிமை ரூ.70 கோடி [சன் டிவி], டிஜிட்டல் உரிமை ரூ.125 கோடி [நெட்ஃபிளிக்ஸ்] என கூறப்படுகிறது.
ஆகமொத்தம் திரையில் வெளியாவதற்கு முன்னரே லியோ திரைப்படம் ரூ.434 கோடி வரை வசூல் செய்துள்ள நிலையில், வெளியீட்டுக்குப் பின்னர் கூடுதலாக 125 கோடி ரூபாய் வசூலாகும் எனக் கூறப்படுகிறது.