லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் நடிப்பில் உருவாகி மாபெரும் எதிர்பார்ப்பில் வெளியான திரைப்படம் லியோ வெளியான முதல் நாளிலிருந்தே பலவிதமான விமர்சனங்களை சந்தித்தாலும், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வசூலில் இதுவரை உலகளவில் ரூ. 400 கோடியை நெருங்கிவிட்டது.
இந்நிலையில், உலகளவில் பட்டையை கிளப்பி வரும் லியோ படம் வெளிநாடுகளில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, லியோ படம் வெளிவந்து நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில் வெளிநாடுகளில் மட்டும் ரூ. 145 முதல் ரூ. 150 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.