லியோ LCU -ஆ இல்லையா? நீண்ட நாள் கேள்விக்கு கிடைத்த பதில்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய அனைத்து படங்களும், சூப்பர் ஹிட் ஆகியுள்ளன.

இதில், கைதி, விக்ரம் ஆகிய இரண்டு படங்களும், லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் என்ற கான்செப்டில் உருவாக்கப்பட்டிருந்தது.

இதே LCU கான்செப்டில், இவர் இயக்கியுள்ள லியோ படமும் இருக்குமா என்று, ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாள் கேள்வி இருந்து வந்தது.

இந்த கேள்விக்கான பதில் தற்போது தெரியவந்துள்ளது. அதாவது, இந்த திரைப்படம் Stand alone திரைப்படமாக தான், லோகேஷ் கனகராஜ் எடுத்துள்ளாராம். இது LCU படம் கிடையாதாம்.

சாதாரண சின்ன, சின்ன இணைப்புகளை பயன்படுத்தி, இந்த திரைப்படத்தை LCU-க்குள் கொண்டு வரும் எண்ணம், லோகேஷ் கனகராஜ்-க்கும் கிடையாதாம்.

மேலும், அடுத்து எந்த திரைப்படத்தில், LCU இடம்பெறும் என்ற ஐடியா லோகேஷ் கனகராஜிக்கே இன்னும் தெளிவாக இல்லையாம்.

இந்த தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது, லியோ நிச்சயம் LCU-ல் கிடையாது என்று தெரியவந்துள்ளது. இதுவரை, கைதி, விக்ரம் ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டும் தான், எல்.சி.யு-வில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News