Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

லியோ படத்தில் இணைந்த பிரபல நடிகரின் தம்பி..யார் தெரியுமா?

சினிமா

லியோ படத்தில் இணைந்த பிரபல நடிகரின் தம்பி..யார் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் லியோ படத்தில் நடித்து வருகிறார். ‘விக்ரம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ உருவாகி வருகிறது.

விக்ரம் படத்திற்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பால் லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்தப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் ஒரு மாதங்களுக்கு மேலாக விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

இந்நிலையில் ‘லியோ’ படத்தில் நடிகர் நாசரின் தம்பி ஜவஹர் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் ஜிவி 2 படத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார் ஜவஹர். இதனையடுத்து தற்போது இவர் ‘லியோ’ படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top