Connect with us

Raj News Tamil

4-வது நாள் லியோ வசூல்? எத்தனை கோடி?

சினிமா

4-வது நாள் லியோ வசூல்? எத்தனை கோடி?

தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக இருந்த லியோ, கடந்த 19-ஆம் தேதி அன்று வெளியானது. இந்த திரைப்படத்தை கண்ட ரசிகர்கள் பலரும், கலவையான விமர்சனங்களையே கூறி வந்தனர்.

இருப்பினும், தொடர் விடுமுறை காரணமாக, இந்த திரைப்படம் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் 4-வது நாள் வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது.

அதன்படி, இப்படம், 4 நாளில் மட்டும் கிட்டதட்ட 400 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்றும் சரியாக தெரியவில்லை. தயாரிப்பாளர் தரப்பில் இருந்து முழு விளக்கம் அளித்த பிறகு, உண்மை என்ன என்று தெரியவரும்.

More in சினிமா

To Top